தை பிறந்தால் வழிப் பிறக்கும் - மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

தை பிறந்தால் வழிப் பிறக்கும் என்பதுபோல், தமிழ்நாட்டிற்கும், 4 மாதத்தில் வழிப் பிறக்கப் போவதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தை பிறந்தால் வழிப் பிறக்கும் என்பதுபோல், தமிழ்நாட்டிற்கும், 4 மாதத்தில் வழிப் பிறக்கப் போவதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமது சட்டமன்ற தொகுதியான சென்னை கொளத்தூரில், வேட்டி, சேலைகளுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை மு.க.ஸ்டாலின் வழங்கினார். அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதும், மக்கள் பணிகளை தொய்வின்றி நிறைவேற்றி வருவதாகத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, கொளத்தூர் GKM காலனி பகுதியில், சென்னை அரசினர் தொடக்கப்பள்ளியில் தரைத்தளம் மற்றும் முதல் தளங்களில் வகுப்பறைகள் உள்ளிட்ட கட்டிட பணிக்கு, மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
Comments