ஜனவரி 16 முதல் கொரோனா தடுப்பூசி..! - மத்திய அரசு

0 3211

நாடு முழுவதும் வரும் 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகளை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு கடந்த 2 ஆம் தேதி அனுமதி வழங்கியது.

இதையடுத்து அடுத்தடுத்து இரு முறை கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் நடைபெற்றது. இதற்கிடையில், கொரோனா தடுப்பூசியை நாடு முழுவதும் கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆனால் வினியோகப்பணிகளில் 2 நாட்கள் கால தாமதம் ஏற்பாட்டுள்ளதால், முதலில் திட்டமிட்டபடி 13-ம் தேதி கொரோனா தடுப்பூசியை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில், வினியோகப்பணிகளில் ஏற்பட்ட கால தாமதம் காரணமாக நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் பணி திட்டமிட்ட நாளை விட 2 நாட்கள் கழித்து அதாவது ஜனவரி 16-ம் தேதி தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

முதற் கட்டமாக சுகாதார ஊழியர்கள், முன்கள பணியாளர்கள் ஆகியோருக்கு தடுப்பூசி போடப்படும் என்றும், முதற்கட்டத்தில் 3 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

இதன் பின்னர் 50 வயதிற்கு மேற்பட்டோருக்கும், 50 வயதிற்கு கீழ் உள்ள நீரிழிவு நோய் போன்று பெரும் பாதிப்பை தரும் உடல்நல குறைபாடு உள்ளோருக்கும் தடுப்பூசி போடப்படும் என்றும், இந்த இரண்டாம் கட்டத்தில் 27 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments