கர்நாடகத்தில் கொரோனா தடுப்பூசி திட்டம் 11ஆம் தேதி பிரதமர் தொடங்கி வைப்பார்: கர்நாடக அமைச்சர் தகவல்

0 1477
கர்நாடகத்திலுள்ள 2 மருத்துவமனைகளில் 11ம் தேதி கொரோனா ஊசி போடும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருப்பதாக அந்த மாநில சுகாதார அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்திலுள்ள 2 மருத்துவமனைகளில் 11ம் தேதி கொரோனா ஊசி போடும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருப்பதாக அந்த மாநில சுகாதார அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்.

பெங்களூரை சேர்ந்த ஒரு மருத்துவமனையிலும், ஹுப்ளியில் உள்ள மருத்துவமனையிலும் வீடியோ கான்பரன்சிங் மூலம் இத்திட்டத்தை 11ம் தேதி மாலை 4 மணிக்கு அவர் தொடங்கி வைக்க இருப்பதாக சுதாகர் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் 5,000 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி வைக்கப்பட இருப்பதாகவும், இதில் கர்நாடகத்தில் உள்ள 235 மையங்களும் அடங்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கர்நாடகத்துக்கு 13.9 லட்சம் டோஸ் மருந்து விரைவில் வர இருப்பதாகவும், அதை சேமித்து வைக்க 29 ஆயிரத்துக்கும் அதிகமான நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு இருப்பதாகவும் அமைச்சர் சுதாகர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments