சென்னையில் பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தவருக்கு சொந்தமான சொத்துகளுக்கு சீல்

0 144169
சென்னை மண்ணடி மூர் தெருவில், பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தவருக்கு சொந்தமான 2 பழமையான கட்டிடங்களை வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

சென்னை மண்ணடி மூர் தெருவில், பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தவருக்கு சொந்தமான 2 பழமையான கட்டிடங்களை வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

பிரிவினையின்போது பாகிஸ்தானுக்கு சென்றவர்களின் சொத்துகள், எதிரி சொத்துகளாக அறிவிக்கப்பட்டு, அதற்கான சட்டத்தின்படி நாடு முழுவதும் 9406 அசையா சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டன.

அந்த வகையில் சென்னை மண்ணடி மூர் தெருவில் 2 பழமையான கட்டிடங்களுக்கு, மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி பேட்டரியா தலைமையில், வருவாய் துறை அதிகாரிகளின் குழு சீல்வைத்தது. முன்னதாக அந்த பாழடைந்த கட்டிடத்தை பயன்படுத்தி வந்தவரின் பொருட்கள் அகற்றப்பட்டன.

எதிரி சொத்தை அனுபவித்து வரும் தற்போதைய நபர்களே அதை அரசிடம் விலைக்கு வாங்கிக் கொள்ள, மத்திய உள்துறை அமைச்சகம் முன்னுரிமை அளிக்கும் என்றும், அவர்கள் வாங்காவிட்டால் ஏலத்தில் விடுவது பற்றி மத்திய அரசு முடிவெடுக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments