இந்தியாவில் டிசம்பரில் அதிகரித்த பெட்ரோல், டீசல் பயன்பாடு

இந்தியாவில் பொருளாதார நடவடிக்கைகள் வேகமெடுத்துள்ளதால் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் பயன்பாடு டிசம்பரில் அதிகரித்துள்ளது.
இந்தியாவில் பொருளாதார நடவடிக்கைகள் வேகமெடுத்துள்ளதால் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் பயன்பாடு டிசம்பரில் அதிகரித்துள்ளது.
இந்தியாவில் மொத்த எரிபொருள் தேவையில் 40 விழுக்காட்டைப் பெற்றிருக்கும் டீசல் பொருளாதார வளர்ச்சியைத் தீர்மானிக்கும் காரணிகளில் ஒன்றாக விளங்குகிறது.
பொருளாதாரச் செயல்பாடுகள் வேகம்பெற்றுள்ளதால் டிசம்பரில் எரிபொருள் பயன்பாடு உச்சநிலையை எட்டியுள்ளது. டிசம்பரில் டீசல் நுகர்வு முந்தைய மாதத்தைவிட 1 புள்ளி 9 விழுக்காடு அதிகரித்து 71 லட்சத்து 80 ஆயிரம் டன்னாக இருந்தது.
இது முந்தைய ஆண்டின் இதே காலக்கட்டத்தைவிட 2 புள்ளி 8 விழுக்காடு குறைவாகும். டிசம்பரில் பெட்ரோல் பயன்பாடு முந்தைய மாதத்தைவிட ஒன்றரை விழுக்காடு அதிகரித்து 27 லட்சம் டன்னாக இருந்தது.
Comments