சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.432 சரிவு; சவரன் தங்கம் ரூ.37,600ஆக விற்பனை...

0 2613
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.432 சரிவு; சவரன் தங்கம் ரூ.37,600ஆக விற்பனை...

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு இன்று 432 ரூபாய் குறைந்துள்ளது.

கடந்த 6ம் தேதி ஒரு சவரன் தங்கம் விலை 39 ஆயிரம் ரூபாயை தாண்டியது. எனினும் நேற்று முன்தினமும், நேற்றும் தங்கம் விலை படிப்படியாக குறைந்தது. இந்நிலையில் 3வது நாளாக இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது.

நேற்று 4 ஆயிரத்து 754 ரூபாயாக இருந்த ஒரு கிராம் தங்கம் விலை இன்று 54 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 700 ரூபாயாக விற்கப்படுகிறது. நேற்று 38 ஆயிரத்து 32 ரூபாயாக இருந்த ஒரு சவரன் தங்கம் விலை இன்று 432 ரூபாய் சரிந்து 37 ஆயிரத்து 600 ரூபாயாக விற்பனையாகிறது.

நேற்று ஒரு கிலோ கட்டி வெள்ளி 73 ஆயிரத்து 100 ரூபாயாக விற்பனையான நிலையில் இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 100 ரூபாய் குறைந்து 69 ஆயிரம் ரூபாயாக விற்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments