தடுப்பூசிகளால் மனித குலத்தை காக்க இந்தியா தயாராக உள்ளது- பிரதமர் மோடி

தடுப்பூசிகளால் மனித குலத்தை காக்க இந்தியா தயாராக உள்ளது- பிரதமர் மோடி
இந்தியாவில் தயாராகும் இரண்டு நிறுவனங்களின் தடுப்பூசிகளை வழங்கி மனித குலத்தை காக்க தயாராக உள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
16 ஆவது வெளிநாடுவாழ் இந்தியர் தினத்தை துவக்கி வைத்து பேசுகையில் மோடி இந்த உறுதியை அளித்துள்ளார். கொரோனா பரவத் துவங்கிய போது இந்தியா பிபிஇ கிட்டுகளையும், வென்டிலேட்டர்களையும், சோதனை கிட்டுகளையும் இறக்குமதி செய்து கொண்டிருந்தது.
ஆனால் இன்று சுயசார்பை எட்டியுள்ள இந்தியா தடுப்பூசிகளால் உலக மக்களை காக்க தயார் நிலையில் உள்ளது என்றார் மோடி. உலகமே இந்தியாவின் தடுப்பூசிகளை எதிர்நோக்கி இருப்பதாக மோடி கூறினார்.
Comments