பொங்கல் திருநாளையொட்டி சென்னை - நாகர்கோவில், சென்னை - கோவை இடையே சிறப்பு ரயில்கள்..!

0 1025
பொங்கல் திருநாளையொட்டி சென்னை - நாகர்கோவில், சென்னை - கோவை இடையே சிறப்பு ரயில்கள்..!

பொங்கல் திருநாளையொட்டிச் சென்னை - நாகர்கோவில், சென்னை - கோவை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

சென்னை எழும்பூரில் இருந்து ஜனவரி 12, 13 ஆகிய நாட்களில் இரவு பத்தரை மணிக்குப் புறப்படும் ரயில் மறுநாள் பகல் 11.10 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

நாகர்கோவிலில் இருந்து ஜனவரி 16, 17 ஆகிய நாட்களில் பிற்பகல் இரண்டே முக்கால் மணிக்குப் புறப்படும் ரயில் மறுநாள் அதிகாலை 3.40 மணிக்குச் சென்னை எழும்பூர் வந்தடையும்.

சென்னை சென்ட்ரலில் இருந்து ஜனவரி 13ஆம் நாள் இரவு பதினொன்றரை மணிக்குப் புறப்படும் ரயில் மறுநாள் காலை 8 மணிக்குக் கோவையைச் சென்றடையும்.

கோவையில் இருந்து ஜனவரி 17ஆம் நாள் இரவு 8 மணிக்குப் புறப்படும் ரயில் மறுநாள் அதிகாலை நாலரை மணிக்குச் சென்னைக்கு வந்து சேரும். இந்தச் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளைக் காலை 8 மணிக்குத் தொடங்க உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments