'நம்முடன் தமிழக முதல்வர் பயணிக்கிறார்!- 'எடப்பாடி பழனிசாமியை நெகிழ வைத்த சேலம் விமானி

0 7233

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விட்டு நேற்று சேலத்திலிருந்து சென்னை திரும்பினார். சேலம் விமான நிலையத்தில் இருந்து தனியார் ட்ரூஜெட் விமானத்தில் சென்னைக்கு பயணம் செய்தார். இந்த விமானத்தை விமானி கோபிநாத் இயக்கினார்.

முன்னதாக, விமான நிலையத்தில் முதல்வரை சந்தித்த கேப்டன் கோபிநாத், தாங்கள் செல்லும் விமானத்தை இயக்க விருப்பப்பட்டு இன்று பணிக்கு வந்திருப்பதாகவும், தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இருப்பினும், தங்களுக்காக விமானத்தை இயக்க வேண்டுமென்ற ஆவலில் பணிக்கு வந்தேன் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடத்தில் கூறினார். விமானிக்கு ஆண் குழந்தை பிறந்த செய்தியை அறிந்த, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேப்டன் கோபிநாத் மற்றும் அவரின் மனைவிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மேலும், ட்ரூஜெட் விமானத்தில் எப்போதும் இல்லாத வகையில் முதல் முறையாக விமானத்தில் விமானி கோபிநாத் தமிழில் அறிவிப்பு செய்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த விமானத்தில் நம்முடன் பயணம் செய்கிறார் என்றும் விமானி அறிவித்து பயணிகளிடத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.

சேலம் மாவட்டம் குறிச்சி பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் மகேஸ்வரி தம்பதியின் மகனான கேப்டன் கோபிநாத் 2008ம் ஆண்டு அமெரிக்காவில் விமானி பயிற்சி பெற்றார். பிறகு, சேலம் விமான பயிற்சி பள்ளியிலும் பணியாற்றினார். தான் சேலத்தை சேர்ந்தவன் என்பதாலும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்துக்காரர் என்பதாலும் அவருக்கு விமானம் ஓட்ட ஆசைப்பட்டதாகவும் அதற்காக பெருமைப்படுவதாகவும் கோபிநாத் குறிப்பிட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments