நாடாளுமன்ற கலவரத்திற்கு முன்னர் டிரம்ப் வைத்த சர்ச்சையை கிளப்பும் பார்ட்டி.!

0 1889

உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய அமெரிக்க நாடாளுமன்ற கலவரம் நடப்பதற்கு சில மணி நேரம் முன்பு, அதிபர் டிரம்ப் தமது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுடன் ஆட்டம் போட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டிரம்பின் மூத்த மகன் டொனால்டு ஜான் டிரம்ப் ஜூனியரின் மொபைல் போனில் பதிவான இந்த வீடியோவில், டிரம்ப் ஆதரவாளர்கள் பலர் பாப் இசைக்கு நடமாடும் காட்சிகள் உள்ளன.

டிரம்பும், மனைவி மெலனியாவும் அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் நடனமாடுவதும் வீடியோவில் தென்படுகிறது. அந்த வீடியோவில் பேசும் டிரம்பின் மகள் இவாங்காவும், மகன் ஜான் டிரம்பும், ஆதரவாளர்களை, தேச பற்றாளர்களே என்று அழைத்து டிரம்புக்கு ஆதரவாக போராடுமாறு கூறும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

கடந்த புதன் அன்று வெள்ளை மாளிகையில் தனது ஆதரவாளர்களிடம் பேசிய டிரம்ப், நாடாளுமன்றத்திற்கு பேரணியாக சென்று போராடுமாறு தூண்டுவதற்கு முன்னர் இந்த பார்ட்டி நடத்தப்பட்டதா என்பது தெளிவாக தெரியவில்லை. அதிகாரத்தை விட்டுக் கொடுக்க மனதில்லாமல் டிரம்ப் பார்ட்டி வைத்து ஆதரவாளர்களிடம் கலவரத்தை நடத்த சொன்னாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments