2020ஆம் ஆண்டில் இந்தியாவில் BMW கார் விற்பனை 31 விழுக்காடு சரிவு

2020ஆம் ஆண்டில் இந்தியாவில் BMW கார் விற்பனை 31 விழுக்காடு சரிவு
BMW நிறுவனத்தின் வாகனங்களின் விற்பனை இந்தியாவில் 2020ஆம் ஆண்டில் 31 விழுக்காடு சரிந்துள்ளது.
ஜெர்மனியைச் சேர்ந்த வாகனத் தயாரிப்பு நிறுவனமான BMW 2019ஆம் ஆண்டில் இந்தியாவில் ஒன்பதாயிரத்து 641 வாகனங்களை விற்றுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா சூழலில் ஆறாயிரத்து 604 வாகனங்களே விற்பனையாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டில் இரண்டாயிரத்து 563 இருசக்கர வாகனங்கள் விற்பனையானதாகவும் BMW தெரிவித்துள்ளது. 2021ஆம் ஆண்டில் இந்திய சொகுசு கார் விற்பனைச் சந்தையில் குறிப்பிடத் தக்க பங்கைப் பெற முடியும் என BMW இந்தியா குரூப்பின் தலைவர் விக்ரம் பாவா தெரிவித்துள்ளார்.
Comments