புனேயில் உள்ள சீரம் இந்தியா நிறுவனத்திடமிருந்து தடுப்பூசியை ஏற்றி அனுப்புவதில் மேலும் 48 மணி நேர தாமதம்?

புனேயில் உள்ள சீரம் இந்தியா நிறுவனத்திடம் இருந்து கொரோனா தடுப்பூசிகளை நாட்டின் இதர பகுதிகளுக்கு அனுப்பும் பணி மேலும் 2 நாட்கள் தாமதமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
தடுப்பூசிகளை ஏற்றி அனுப்புவதற்கான உத்தரவு இந்த வாரமே மத்திய அரசிடம் இருந்து கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளையும் புனே விமான நிலைய அதிகாரிகள் தயார் நிலையில் வைத்திருந்தனர்.
ஆனால் தடுப்பூசிக்கான விலை தொடர்பாக மத்திய அரசுடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் விநியோகப்பணிகள் தாமதமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதே சமயம் இந்த தகவலை சீரம் இந்தியா சிஇஓ அதார் புனேவாலா மறுத்துள்ளார். சீரம் இந்தியா தனது கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் 10 கோடி டோசுகளை தலா 200 ரூபாய் என்ற விலைக்கு அரசுக்கு விற்க முன்வந்துள்ளது.
வெளிச்சந்தையில் ஒரு டோஸ் கோவிஷீல்டின் விலை 1000 ரூபாய் என்றும் சீரம் இந்தியா தெரிவித்துள்ளது.
Comments