' தந்தையை பராமரிக்கும் பொறுப்பு மகனுக்கு உள்ளது!' - மனைவிக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு போலீஸ்காரர் மாயம்

0 8693
மனைவியுடன் போலீஸ்காரர் ஜினிகுமார்

சென்னையில் இருந்து குமரிக்கு விடுமுறைக்கு வந்த காவலர் மனைவி மற்றும் உறவினர்கள் கொடுமை செய்வதாக கூறி கடிதம் எழுதி வைத்து விட்டு மாயமாகிவிட்டார்.


கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளாங்கோடு அருகேயுள்ள பின்னமூட்டுவிளை பர்னபாஸ் என்பவரின் மகன் ஜினிகுமார் . இவர் சென்னை பூக்கடை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2011 ஆம் ஆண்டு இவருக்கும் நட்டாலம் பகுதியை சேர்ந்த ஷெலின் ஷீபா என்பவருக்கும் திருமணம் நடந்தது. ஜினிகுமார் சென்னையில் பணியில் இருக்க, மனைவி நட்டாலத்திலேயே இரு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், ஜனவரி 6 ஆம் தேதி சென்னையிலிருந்து மனைவி, குழந்தைகளை பார்க்க ஜினிகுமார், நட்டாலம் சென்றுள்ளார். அப்போது, ஷெரின் ஷீபா, மாமியார் லதா மற்றும் மைத்துனர் ஆகியோர் வெள்ளாங்கோடு பகுதியில் உள்ள ஜினிகுமாரின் சொத்துகளை மனைவி பெயருக்கு மாற்றி எழுத கட்டாயபடுத்தியுள்ளனர்.

இதற்கு, போலீஸ்காரர் ஜினிகுமார் மறுத்துள்ளார். இதனால், போலீஸ்காரர் ஜினிகுமாரை அவர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். செருப்பை கொண்டு அடித்ததாதாகவும் சொல்லப்படுகிறது. இதனால், மனமுடைந்த ஜினிகுமார் தன் தந்தை வீட்டுக்கு சென்றுள்ளார். அடுத்த நாளிலிருந்து ஜினிகுமாரை காணவில்லை. மகனை தந்தை தேடிய போது ஜினிகுமார் எழுதிய 22 பக்க கடிதம் கிடைத்தது. அதில், இளமை காலத்தில் தன் தாய், தந்தை பட்ட கஷ்டம். வறுமையிலும் தன்னையும் சகோதரிகளையும் பராமரித்து வளர்த்தது, கஸ்ட ஜீவனத்திலும் தன்னை கல்லூரி வரை படிக்க வைத்து தனக்கு பிடித்தமான காவல்துறை வேலை கிடைக்க உதவியது, தன் இரண்டு சகோதரிகளையும் கஷ்டப்பட்டு திருமணம் செய்து கொடுத்தது குறித்த தன் தந்தையின் தியாகங்கள் குறித்து ஜினிகுமார் உருக்கத்துடன் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், அந்த கடிதத்தில் , தன் தாயார் புற்றுநோயால் கஷ்டப்பட்ட போது , மருமகள் என்ற முறையில் தன் மனைவி சிகிச்சைக்கு பணம் கொடுப்பதை கூட தடுத்தார் என்றும் தன் பேரப்பிள்ளைகளை கூட அவரை கண்ணால் காண அனுமதிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார். மனைவியை பராமரிக்கும் பொறுப்பு கணவனுக்கு உள்ளது போல, தந்தையை பராமரிக்கும் பொறுப்பும் மகனுக்கு உள்ளது. எனக்கு சொந்தமான இந்த நிலம் தன் தந்தைக்கு உரிமையானது என்றும் அந்த கடிதத்தில் போலீஸ்காரர் ஜினிகுமார் குறிப்பிட்டுள்ளார். மேலும், தன்னை செருப்பால் அடித்து அவமானப்படுத்தியதால் தன் வாழ்க்கையை முடித்துக் கொள்ளப் போவதாகவும் ஜினிகுமார் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, அருமணை காவல் நிலையத்தில் போலீஸ்காரர் ஜினிகுமரின் தந்தை பர்னபாஸ் புகார் அளித்துள்ளார். மாயமான போலீஸ்காரரின் செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டுள்ளது. போலீஸ்காரர்கள் ஜினிகுமாரை தேடி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments