யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடம் இரவோடு இரவாக இடித்து அழிப்பு

0 941
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடம் இரவோடு இரவாக இடித்து அழிப்பு

லங்கை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடிக்கப்பட்டது.

முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நினைவாக, இந்தப் பல்கலைக்கழக வளாகத்தில் 2018ம் ஆண்டு நினைவுச்சின்னம் ஒன்று அமைக்கப்பட்டது.

இதனை நிர்வாகத்தினர் இடித்து தரைமாக்குவதாக தகவல் அறிந்து, மாணவர்கள்,அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பல்கலைக் கழகம் முன் திரண்டனர்‍. அப்போது பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைய போலீசார், அனுமதி மறுத்ததால், அவர்களுடன் மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

நினைவுச்சின்னம் இடிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து ஏராளமானோர் திரண்டுள்ளதால் பல்கலைக் கழக வளாகத்தில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments