வடகொரியாவின் மிகப் பெரிய எதிரி அமெரிக்கா- கிம் ஜோங் உன்

வடகொரியாவின் மிகப் பெரிய எதிரி அமெரிக்கா- கிம் ஜோங் உன்
வடகொரியாவின் மிகப் பெரிய எதிரி அமெரிக்காதான் என்று வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேசியதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆளும் தொழிலாளர் கட்சி மாநாட்டில் பேசிய அவர், அமெரிக்காவில் யார் ஆட்சியில் இருந்தாலும் வடகொரியா அதன் கொள்கையிலிருந்து மாறாது என்று குறிப்பிட்டு பேசியுள்ளார்.
மேலும் வடகொரியாவின் வளர்ச்சிக்கு மிகப் பெரும் எதிரியாக இருக்கும் அமெரிக்காவை தாழ்த்தி நாம் வளரவேண்டும் என்றும் அவர் பேசியதாகவும் கூறப்படுகிறது. பைடன் பதவியேற்கும் முன் கிம் பேசியிருப்பது உலக அரங்கில் உன்னிப்பாகப் பார்க்கப்படுகிறது.
Comments