மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்து அடுத்த மாதம் பரிசோதிக்கப்படும்- பாரத் பயோடெக் நிறுவனம்

0 1590
மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்து அடுத்த மாதம் பரிசோதிக்கப்படும்- பாரத் பயோடெக் நிறுவனம்

மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்து அடுத்த மாதம் பரிசோதனை நடைபெறும் என பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த நிறுவனம் தயாரித்துள்ள கோவேக்சின் தடுப்பூசி அவசர பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. இதைப்போல கொரோனாவுக்கு எதிராக தடுப்பு மருந்து ஒன்றையும், வாஷிங்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்த நிறுவனம் தயாரித்து உள்ளது.

மூக்கு வழியாக செலுத்தப்படும் இந்த தடுப்பு மருந்து ஆய்வக பரிசோதனையை நிறைவு செய்து, மனிதர்களிடம் செலுத்தி பரிசோதிக்கும் முதற்கட்ட ஆய்வுக்கு தயாராகி இருக்கிறது.

இந்த பரிசோதனை அடுத்த மாதம் மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெறும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments