லண்டனில் 30 பேரில் ஒருவருக்கு புதிய கொரோனா தீவிரமாகப் பரவியுள்ளது- லண்டன் மேயர்

0 1402
லண்டனில் 30 பேரில் ஒருவருக்கு புதிய கொரோனா தீவிரமாகப் பரவியுள்ளது- லண்டன் மேயர்

ண்டனில் 30 பேருக்கு ஒருவர் வீதம் புதிய வீரியம் மிக்க கொரோனா தொற்றுப் பரவியிருப்பதாக மாநகர மேயர் சாதிக் கான் அறிவித்துள்ளார்.

ஒருவாரத்தில் வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ள தீவிர பாதிப்புடைய நோயாளிகளின் எண்ணிக்கை 42 சதவீதம் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ள மேயர், உடனடியாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் மிக அதிகளவில் உயிரிழப்புகள் ஏற்படலாம் என்று கவலைத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு தாம் தகவல் அனுப்பியுள்ளதாகவும், இது மிகவும் மோசமான அவசரநிலை என்றும் மேயர் அறிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments