இங்கிலாந்தில் இருந்து வருவோரை ஏழு நாட்கள் தனிமைப்படுத்த டெல்லி அரசு உத்தரவு

இங்கிலாந்தில் இருந்து வருவோரை ஏழு நாட்கள் தனிமைப்படுத்த டெல்லி அரசு உத்தரவு
இங்கிலாந்து விமான சேவை மீண்டும் தொடங்கிய நிலையில் அங்கிருந்து வருவோரை ஏழு நாட்கள் தனிமைப்படுத்த டெல்லி அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில் லண்டனில் இருந்து டெல்லி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் வந்த 250 பயணிகளுக்கு இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
புறப்படும் போது இல்லாத சட்டம் வந்து இறங்கும்போது திடீரென அமல்படுத்தியதற்கு பயணிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து விமான நிலையத்தில் குழப்பமான காட்சிகள் அரங்கேறின.
காவல்துறை மற்றும் விமானநிலைய ஊழியர்களிடம் பயணிகள் காரசாராமான வாதத்தில் ஈடுபட்டனர்.
Comments