44வது நாளாக போராடி வரும் விவசாயிகள்..8வது சுற்றுப் பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை..!

வேளாண் சட்டங்களுக்கு எதிராக 44வது நாளாக போராடி வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 8வது சுற்றுப் பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படவில்லை.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக 44வது நாளாக போராடி வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 8வது சுற்றுப் பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படவில்லை.
40 விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர் மற்றும் வர்த்தக அமைச்சர் பியூஷ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நரேந்திரசிங் தோமர், 3 வேளாண் சட்டங்களையும் நீக்கியே ஆக வேண்டும் என்று விவசாய சங்கங்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டதால் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்று கூறினார். மீண்டும் வரும் 15 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Comments