ரயில்கள் நிரம்பிய நிலையில் பொங்கலுக்காக இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளில் முன் பதிவு மந்தம்

சென்னையில் இருந்து செல்லும் ரயில்கள் நிரம்பி உள்ள நிலையில் ஆம்னி பேருந்துகள் காலியாக உள்ளன.
சென்னையில் இருந்து செல்லும் ரயில்கள் நிரம்பி உள்ள நிலையில் ஆம்னி பேருந்துகள் காலியாக உள்ளன.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன்,பொங்கலுக்கு சென்னையில் இருந்து வழக்கமாக 1000 பேருந்துகளுக்கு மேல் இயக்கப்படும் என்றார்.
ஆனால் இப்போது இதுவரை 310 பேருந்துகளுக்கு தான் ஆன்லைன் முன்பதிவு தொடங்கியதாகவும், அதிலும் 60 சதவீதம் தான் நிரம்பி உள்ளது என்றும் அவர் கூறினார்.
பொங்கலுக்கு இன்னும் 5 நாட்கள் உள்ள நிலையில் பேருந்து களில் முன்பதிவு எதிர்பார்த்த அளவு இல்லை என்றும்,சென்னையில் இருந்து 500 பேருந்துகளை இயக்குவதே பெரிய காரியமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
Comments