திரையரங்குகளில் 50 சதவிகித இருக்கைகளை மட்டுமே நிரப்ப வேண்டும் - தமிழக அரசு

திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று 100 சதவீத இருக்கைகளைப் பயன்படுத்தி திரையரங்குகள் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது.
இந்த நிலையில் மத்திய அரசின் அறிவுரை மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதை கருத்தில் கொண்டு அனைத்து திரையரங்குகளும் 50 சதவீத இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி செயல்பட அனுமதி அளிப்பதாக அரசு தெரிவித்துள்ளது.
உயர்நீதிமன்ற உத்தரவின்படி கூடுதல் காட்சிகளை திரையிட்டுக் கொள்ளவும் திரையரங்குகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments