விருத்தாசலம்:தரைப்பாலங்கள் மூழ்கியதால் 50 கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிப்பு

0 1984
விருத்தாசலம் பகுதியில் உள்ள 4 தரைப்பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான பொதுபோக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

விருத்தாசலம் பகுதியில் உள்ள 4 தரைப்பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான பொதுபோக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணிமுக்தா அணை, கோமுகி அணை நிரம்பி வெளியேற்றப்பட்ட நீரால் மணிமுக்தாற்றின் இருகரைகளையும் தொட்டபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. வெள்ளத்தால் விருத்தாசலத்தை அடுத்த விலாங்காட்டு- மன்னம்பாடி தரைப்பாலம், மன்னம்பாடி-எடையூர் தரைப்பாலங்கள் மூழ்கியன.

இதேபோல் சாத்துக்கூடல் ஓடையில் வெள்ளப்பெருக்கால் தீவனூர் தரைப்பாலமும் மூழ்கியது. இதே போல விருத்தாசலத்தை அடுத்த உச்சிமேடு பகுதியில் உள்ள தரைப்பாலமும் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. 4 தரைப்பாலங்கள் மூழ்கியதால் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments