திடீர் ராட்சத பள்ளத்தில் புதையுண்ட ஏராளமான கார்கள்

0 3147
இத்தாலி நாட்டில் கார் பார்க்கிங் பகுதி ஒன்றில் திடீரென ஏற்பட்ட ராட்சத பள்ளத்தில் விழுந்து ஏராளமான கார்கள் புதையுண்டன.

இத்தாலி நாட்டில்  கார் பார்க்கிங் பகுதி ஒன்றில் திடீரென ஏற்பட்ட ராட்சத பள்ளத்தில் விழுந்து ஏராளமான கார்கள்  புதையுண்டன.

நேப்பிள்ஸ் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பணிபுரியும் ஊழியர்களின் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் திடீரென இன்று காலை ராட்சத பள்ளம் உருவானது. 

இதில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்கள் அப்படியே  புதையுண்டன. ராட்சத பள்ளம் ஏற்பட என்ன காரணம் என்பது தெரியவில்லை. பள்ளத்தில் புதையுண்ட கார்களுக்குள்  யாரும் சிக்கியுள்ளனரா என்பது உறுதியாக தெரியவில்லை.

சம்பவ இடத்தில் மீட்புக் குழுவினர்  முகாமிட்டு,  கார்களுக்குள் யாரும் சிக்கியுள்ளனரா என தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments