வணிகம் ஏற்றம் கண்டதால் புதிய உச்சம் தொட்ட இந்தியப் பங்குச்சந்தைகள்

0 3145
இந்தியப் பங்குச்சந்தைகளில் வணிகம் ஏற்றமடைந்ததால் பங்குவிலைக் குறியீடுகள் இன்று வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளன.

இந்தியப் பங்குச்சந்தைகளில் வணிகம் ஏற்றமடைந்ததால் பங்குவிலைக் குறியீடுகள் இன்று வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளன.

இந்தியப் பங்குச்சந்தைகளில் இன்று தொடக்கம் முதலே வணிகம் ஏற்றத்துடன் காணப்பட்டது. வணிகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தைப் பங்குவிலைக் குறியீடு சென்செக்ஸ் 689 புள்ளிகள் உயர்ந்து 48 ஆயிரத்து 782 என்னும் புதிய உச்சத்தைத் தொட்டது.

தேசியப் பங்குச்சந்தைப் பங்குவிலைக் குறியீடு நிப்டி 210 புள்ளிகள் உயர்ந்து 14 ஆயிரத்து 347 என்னும் புதிய உச்சத்தைத் தொட்டது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகளை முதலீட்டாளர்கள் அதிக அளவில் வாங்கியதே பங்குச்சந்தை ஏற்றத்துக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments