'லவ் பண்றதோட நிறுத்திக்கனும் ; கல்யாணம்னு வரப்புடாது!'- பேஸ்புக் காதலியால் இளைஞருக்கு நேர்ந்த முடிவு

0 7237

லவ் பண்றதோட நிறுத்திக்கனும் கல்யாணம் அப்படி இப்படினு வரக் கூடாது என்று பேஸ்புக் காதலி கூறி விட்டதால், வாலிபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள பலமநேர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணா . பலமனேரில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் இவர் வேலை செய்து வந்தார். பேஸ்புக்கில் அறிமுகமான பெண் ஒருவரை கடந்த 4 மாதங்களாக ஹரிகிருஷ்ணா காதலித்துள்ளார். அந்தப் பெண்ணும் ஹரிகிருஷ்ணாவின் காதலை ஏற்றுக் கொண்டு பதிலுக்கு பேஸ்புக்கில் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் நேரில் ஒரு முறை கூட சந்தித்தது இல்லை என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், தன் பேஸ்புக் காதலியிடத்தில் ஹரிகிருஷ்ணா திருமண பேச்சை எடுத்து வந்துள்ளார். ‘ திருமணம் செய்து கொள்வது தொடர்பாக தன் காதலியின் பெற்றோரிடத்தில் வந்து பேசுவதாகவும் ஹரிகிருஷ்ணா கூறியிருக்கிறார். ஆனால், அந்த பெண் ஹரிகிருஷ்ணாவுக்கு கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாக பதில் கூறி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் ஹரிகிருஷ்ணா நச்சரித்ததால், 'லவ் பண்றதோட நிறுத்திக்கனும் கல்யாண பேச்செல்லாம் எடுக்கக் கூடாது ' என்று காதலி கூறி விட்டதாக தெரிகிறது.

இதனால், கடந்த சில தினங்களாக மனம் உடைந்த நிலையில் ஹரிகிருஷ்ணா இருந்துள்ளார். இந்த நிலையில், தான் பணி புரிந்த நிறுவனத்திலேயே தற்கொலை செய்து கொண்டர். தகவல் அறிந்து வந்த போலீஸார் , ஹரிகிருஷ்ணாவின் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். பேஸ்புக் காதலால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சித்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments