234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் : உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை

வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில், 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என அக்கட்சியின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில், 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என அக்கட்சியின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தேர்தல் சுற்றுப்பயணத்திற்காக விழுப்புரம் சென்றுள்ள உதயநிதி, அங்கு அண்ணா அறிவாலயத்தில் இருந்து " விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் " என்ற பிரசார இயக்கத்தை துவக்கினார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து குறிப்பிட்ட உதயநிதி, உண்மையை கண்டறிய அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் 8 முறை சம்மன் அனுப்பியும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆஜராகவில்லை என்று சுட்டிக்காட்டினார்.
Comments