சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.408 சரிவு

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 408 ரூபாய் குறைந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 408 ரூபாய் குறைந்துள்ளது.
நேற்று முன்தினம் 39 ஆயிரம் ரூபாயை தாண்டிய ஒரு சவரன் தங்கம் விலை நேற்று 38 ஆயிரத்து 440 ரூபாயாக குறைந்தது. இந்நிலையில் இன்று 2வது நாளாக விலை 408 ரூபாய் குறைந்து 38 ஆயிரத்து 32 ரூபாயாக விற்பனையாகிறது.
நேற்று 4 ஆயிரத்து 805 ரூபாயாக இருந்த ஒரு கிராம் தங்கம் விலை இன்று 51 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 754 ரூபாயாக விற்கப்படுகிறது.
நேற்று 74 ஆயிரத்து 70 ரூபாயாக இருந்த ஒரு கிலோ கட்டி வெள்ளியின் விலை இன்று 970 ரூபாய் சரிந்து 73 ஆயிரத்து 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
Comments