கரூர் : சிறுமிக்கு பாலியல் தொல்லை ... போலீஸிடம் தப்பியவர் உயிரை மாய்த்தார் !

0 8658

திருச்சி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து , தலைமறைவாக இருந்தவர் தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி மாவட்டம் போசம்பட்டியை சேர்ந்தவர் நன்னி போசன் ( வயது 45 ) கூலித் தொழிலாளியான இவருக்கு மனைவியும் திருமணமான மகளும் மகனும் உள்ளனர். இந்த நிலையில், போசம்பட்டியைச் சேர்ந்த 11 வயது சிறுமியிடத்தில் நன்னி போசன் பாலியல் தொல்லையில் ஈடுபட்டு விட்டு தப்பி ஓடி விட்டார். சிறுமிக்கு நடந்த கொடுமை குறித்து பெற்றோர் ஜீயபுரம் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தனர். இதையடுத்து, ஜீயபுரம் அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நன்னி போசனை தேடி வந்தனர்.

இந்த நிலையில், போசம்பட்டியில் தலைமறைவான நன்னி போசன் கரூர் மாவட்டம் குளித்தலை பகுதிக்கு சென்று பதுங்கியிருந்துள்ளார். பின்னர், தன்னை எப்படியும் போலீஸார் பிடித்து விடுவார்கள் என்று கருதிய நன்னி போசன் அங்குள்ள வயல் வெளி பகுதியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீஸார் வாழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஒரு நிமிட சபலத்தால் தனக்கும் குடும்பத்தினருக்கும் அவப்பெயரை ஏற்படுத்திக் கொண்ட நன்னி போசன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments