உ.பி.யில் டால்பினை அடித்துக்கொன்ற மூவர் சிறையில் அடைப்பு

0 2168
உத்தரப்பிரதேசத்தின் பிரதாப்கரில் அரிய வகை உயிரினமான கங்கையாற்று டால்பினை அடித்துக் கொன்ற மூவரைக் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தின் பிரதாப்கரில் அரிய வகை உயிரினமான கங்கையாற்று டால்பினை அடித்துக் கொன்ற மூவரைக் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கங்கையாற்றில் வாழும் டால்பின் பாதுகாக்கப்பட்ட அரியவகை உயிரினங்கள் பட்டியலில் உள்ளது. இந்நிலையில் கால்வாயில் வந்த ஒரு டால்பினைப் பலர் சூழ்ந்துகொண்டு இரும்புக் கம்பிகளாலும் அடித்ததுடன், கோடரியால் வெட்டியும் கொன்றுள்ளனர்.

இந்தக் காட்சி சமூக வலைத்தளத்தில் பரவியதை அடுத்து மூவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments