பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகிக்கும் ரேசன் கடைகள் முன் அரசியல் கட்சியினர் பேனர்கள் வைக்க கூடாது-உயர்நீதிமன்றம் உத்தரவு

0 2162
பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகிக்கப்படும் ரேஷன் கடைகளின் முன், அரசியல் கட்சியின் பேனர்கள் வைக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகிக்கப்படும் ரேஷன் கடைகளின் முன், அரசியல் கட்சியின் பேனர்கள் வைக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திமுக  சார்பில் தொடரப்பட்ட வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் செந்தில் குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ரேஷன் கடைகளுக்குள் அரசியல் கட்சியின் விளம்பர துண்டு பிரசுரங்கள் வினியோகிக்க கூடாது என உத்தரவிட்டனர், பொது இடங்களில் அனுமதியின்றி பேனர்கள் வைக்கப்பட்டிருந்தால், அவற்றை உடனடியாக அகற்றுமாறு அறிவுறுத்திய நீதிபதிகள், பின்னர், வழக்கை முடித்து வைத்தனர்.

அதேநேரம், பொங்கல் பரிசு தொகுப்பில் முதலமைச்சர், முன்னாள் முதலமைச்சர் உருவப்படங்கள் இடம் பெற, நீதிபதிகள் அனுமதி அளித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments