ஐ.நா. பாதுகாப்பு அவையில் இந்தியாவுக்கு எதிரான சீனாவின் நடவடிக்கைகளை பிரான்ஸ் முறியடிக்கும் - இம்மானுவேல் பான்

0 4761
ஐ.நா.பாதுகாப்பு அவையில் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் சீனா ஈடுபடுவதை பிரான்ஸ் அனுமதிக்காது என பிரெஞ்ச் அதிபரின் ஆலோசகர் இம்மானுவேல் பான் தெரிவித்துள்ளார்.

ஐ.நா.பாதுகாப்பு அவையில் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் சீனா ஈடுபடுவதை பிரான்ஸ் அனுமதிக்காது என பிரெஞ்ச் அதிபரின் ஆலோசகர்  இம்மானுவேல் பான் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் பேச்சு நடத்திய பின் பேசிய அவர், காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா. பாதுகாப்பு அவையில் இந்தியாவுக்கு ஆதரவாக பிரான்ஸ் இருக்கும் என்றும், இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் சீனா ஈடுபடுவதை பிரான்ஸ் அனுமதிக்காது என்றும் தெரிவித்தார்.

பொது வெளியில் பேசிய இதே நிலைப்பாட்டையே சீனாவுக்குத் தனியாகக் கூறிக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments