அமெரிக்க நாடாளுமன்ற வளாக வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு

0 815
அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற வன்முறை, மோதலின்போது காயமடைந்த போலீஸ் அதிகாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை தொடர்ந்து பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற வன்முறை, மோதலின்போது காயமடைந்த போலீஸ் அதிகாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை தொடர்ந்து பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

இந்த வன்முறைக்கு அதிபர் டிரம்ப் ஆற்றிய எதிர்வினை குறித்த அதிருப்தியால், டிரம்ப் அமைச்சரவையின் 2 செயலர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம் விரைவில் பொறுப்பேற்க உள்ள நிலையில், போக்குவரத்து துறை செயலர் எலைன் சாவோ, கல்வித்துறை செயலர் பெஸ்டி டேவோஸ் மற்றும் சில நிர்வாக அதிகாரிகள் ராஜினாமா செய்துள்ளனர்.

இதனிடையே, வன்முறையில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு வரும் நிலையில், அதில் சிலர் அவர்கள் பணியாற்றும் நிறுவனங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments