அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நாளை நடைபெறுகிறது.. 3 ஆயிரம் பேர் அமரும் வகையில் ஏற்பாடுகள்

0 1231
சென்னை வானகரத்தில், அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நாளை நடைபெறவுள்ள நிலையில், அதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை வானகரத்தில், அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நாளை நடைபெறவுள்ள நிலையில், அதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமன மண்டபத்தில், தனிநபர் இடைவெளியுடன் 3 ஆயிரம் பேர் அமர வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கொரோனா நெகடிவ் சான்றிதழுடன் வருபவர்களுக்கு மட்டுமே அனுமதி என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாளை நடைபெறும் அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டத்தில் கூட்டணி குறித்தும், தேர்தல் வியூகங்கள் குறித்தும் விவாதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதைத் தொடர்ந்து நாளை மாலை 5 மணி அளவில் இபிஎஸ்-ஓபிஎஸ் தலைமையில் அதிமுக தலைமையகத்தில் மண்டல பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments