காரும், பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து - பதறவைக்கும் CCTV காட்சிகள்

0 6402
கேரளாவில் கட்டுப்பாட்டை இழந்த கார், அரசு பேருந்துடன் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

கேரளாவில் கட்டுப்பாட்டை இழந்த கார், அரசு பேருந்துடன் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

பந்தளம் பகுதியை சேர்ந்த நசுரூதின் என்பவர், வெளிநாடு செல்லும் தனது மகனை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வழியனுப்பிவிட்டு, மனைவி, மருமகளுடன் காரில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

கொட்டாரக்கரை பகுதியில் சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த கார், அதிவேகமாக சென்று அதே சாலையில் மறுமார்க்கத்தில் வந்த அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது.

மோதிய வேகத்தில் காரில் பயணித்த கணவனும், மனைவியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மருமகள் சுமையா படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பேருந்தில் வந்த பயணிகள் 6 பேர் காயமடைந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments