தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்- வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்- வானிலை ஆய்வு மையம் தகவல்
இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழை நீடிக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்கள், நீலகிரி, கோவை என 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யகூடும் என கூறப்பட்டுள்ளது.
சென்னையில் அடுத்த 2 தினங்களுக்கு நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழையும், சில மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
Comments