மாடர்னா தடுப்பு மருந்து கொரோனாவில் இருந்து இரண்டாண்டுகள் வரை பாதுகாப்பு அளிக்கும்- மாடர்னா நிறுவன அதிகாரி

மாடர்னா தடுப்பு மருந்து கொரோனாவில் இருந்து இரண்டாண்டுகள் வரை பாதுகாப்பு அளிக்கும்- மாடர்னா நிறுவன அதிகாரி
மாடர்னா தடுப்பு மருந்து கொரோனாவில் இருந்து இரண்டாண்டுகள் வரை பாதுகாப்பு அளிக்கும் என அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஸ்டீபன் பான்சல் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த மாடர்னா நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்துக்கு ஐரோப்பிய ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டால் இரண்டாண்டுகள் வரை கொரோனா தொற்றாமல் பாதுகாத்துக்கொள்ள முடியும் என மாடர்னா தலைமைச் செயல் அதிகாரி ஸ்டீபன் பான்சல் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன், தென்னாப்பிரிக்க நாடுகளில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரசுக்கு எதிராகவும் தங்கள் தடுப்பு மருந்து செயல் திறன் மிக்கதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
Comments