நாகை : கோயில் வளாகத்தில் பெண் பலாத்காரம் ; இரண்டு இளைஞர்கள் கைது!

0 23672

நாகப்பட்டினம் அருகே கோயிலுக்குள் வைத்து கணவரை இழந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுளளது.

நாகப்பட்டினம் மாவட்டம் வெளிப்பாளையம் நாகதோப்பு பகுதியை சேர்ந்த கணவரை இழந்த பெண் ஒருவர் கூலித் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில், நேற்றிரவு 9 மணி அளவில் நாகை காமராஜர் நகர் பகுதியில் உள்ள தன் சகோதரி வீட்டுக்கு உறங்க அந்த பெண் சென்றுள்ளார்.

அப்போது, அந்த வழியே வந்த இரண்டு இளைஞர்கள் அந்த பெண்ணின் வாயை பொத்தி அருகிலிருந்த அம்மன் கோவிலுக்கு இழுத்துச் சென்றனர். பின்னர், கோயில் வளாகத்துக்குள் வைத்து இரண்டு பேரும் அப்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதிகாலை 2 மணியளவில் இரண்டு இளைஞர்களும் அந்த பெண்ணை விட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர்.

பின்னர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பாதிக்கப்பட்ட பெண் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். போலீசில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக வண்டிப்பேட்டையே சேர்ந்த அருண் ராஜ், அக்கரை குளம் பகுதியை சேர்ந்த ஆனந்த் ஆகிய இரண்டு இளைஞர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதற்கிடையே, காமராஜர் நகரில் உள்ள பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரி வீட்டுக்கு சென்ற மர்ம நபர்கள் சிலர் இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்க கூடாது என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால், தங்களுக்கு தகுந்த பாதுகாப்பு கொடுக்க வேண்டுமென்று பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments