பரியேறும் பெருமாள்' கதாநாயகி திருமணம்... இணை இயக்குநரை கரம் பற்றினார்!

0 38522

பரியோறும் பெருமாள் பட நாயகி ஆனந்தி இணை இயக்குநர் சாக்ரடீஸ் என்பவருடன் நேற்று திருமணம் நடைபெற்றது.

தமிழில் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான 'கயல்' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ஆனந்தி. அந்தப் படத்துக்குப் பிறகு பலரும் 'கயல்' ஆனந்தி என்றே அவரை அழைத்து வந்தனர். பரியேறும் பெருமாள் படத்தில் தன் அட்டகாசமான நடிப்பால் தமிழகம் முழுவதும் நன்றாக பரிச்சயமாகியிருந்தார் ஆனந்தி. தெலுங்கில் அறிமுகமான இவரின் இயற் பெயர் ரக்ஷிதா.

சினிமாவுக்காக தன் பெயரை ஆனந்தி என்று மாற்றிக் கொண்டார். தெலுங்கில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஆனந்தி நடித்த பஸ்டாப் என்ற படம் சூப்பர் ஹிட் ஆனதை தொடர்ந்து பல படங்களில் நடிக்க தொடங்கினார். தமிழில் கிட்டத்தட்ட 15 படங்களில் ஆனந்தி நடித்துள்ளார்.

தற்போது, 'அலாவுதீனின் அற்புத கேமரா', 'ஏஞ்சல்', 'இராவணக் கோட்டம்' உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வரும் ஆனந்திக்கும் வேலூரைச் சேர்ந்த இணை இயக்குநரான சாக்ரடீசுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இது, பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணமாகும்.

இவர்களின் திருமணம் தெலங்கானா மாநிலத்தில் ஆனந்தியின் சொந்த ஊரான வாராங்கல்லில் உள்ள கோடெம் கன்வென்ஷன் மையத்தில் இந்து முறைப்படி நேற்று நடைபெற்றது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆனந்திக்கு நெருங்கிய திரையுலக நண்பர்கள் மட்டுமே திருமணத்தில் பங்கேற்றனர்.

திருமணம் பந்தத்துக்குள் நுழைந்த ஆனந்திக்கு தமிழ், தெலுங்கு திரைப்பட ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments