அமெரிக்க நாடாளுமன்ற வளாக காவல்துறை தலைவர் ஸ்டீவன் சுந்த் ராஜினாமா?

அமெரிக்க நாடாளுமன்ற வளாக காவல்துறை தலைவர் ஸ்டீவன் சுந்த் ராஜினாமா
அமெரிக்க நாடாளுமன்ற வளாக காவல்துறை தலைவர் ஸ்டீவன் சுந்த் (Steven Sund) பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறிப் புகுந்து சூறையாடிய டிரம்ப் ஆதரவாளர்களை கட்டுப்படுத்தத் தவறிவிட்டதாக ஸ்டீவன் சுந்த் மீது கடும் விமர்சனம் எழுந்தது.
இந்த தோல்விக்கு பொறுப்பேற்று, அவர் அமெரிக்க நாடாளுமன்ற வளாக காவல்துறை தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும், தவறினால் அப்பதவியிலிருந்து நீக்கப்படுவார் என சபாநாயகர் நான்சி பெலோஸி, செனட் சபை குடியரசுக் கட்சி தலைவர் Chuck Schumer எச்சரித்திருந்தனர். இந்நிலையில், ஸ்டீவன் சுந்த், பதவி விலகல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
Comments