சீனாவில் உள்ளசிறுபான்மை பூர்வகுடிகள் அனைத்தையும் ஒரே தேசிய இனமாக அடையாளப்படுத்த சீன அரசு திட்டம்

சீனாவில் உள்ளசிறுபான்மை பூர்வகுடிகள் அனைத்தையும் ஒரே தேசிய இனமாக அடையாளப்படுத்த சீன அரசு திட்டம்
சீனாவில் உள்ளசிறுபான்மை பூர்வகுடிகள் அனைத்தையும் ஒரே தேசிய அடையாளத்தின் கீழ் கொண்டு வர அதிபர் சீ ஜின்பிங் அரசு திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் சீனாவின் ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்பாடுகளை அவற்றின் மீது அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சீனாவில் சுமார் 55 அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பூர்வீகமான சிறுபான்மை இனங்கள் உள்ளன. இவற்றை கலப்பு இனமாக மாற்ற அரசு முயன்று வருகிறது.
சீனாவில் வசிக்கும் சிறுபான்மை இனத்தவரில் முக்கியமான முஸ்லீம் குழுக்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதாகவும்
அவர்களின் மத நம்பிக்கை மீது சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆதிக்கம் செலுத்தி வருவதாகவும் உலக நாடுகள் சீனாவைக் கண்டித்துவருகின்றன.
Comments