கொரோனா விழிப்புணர்வு காலர் டியூனிலிருந்து நடிகர் அமிதாப் பச்சன் குரலை நீக்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

0 727
கொரோனா விழிப்புணர்வு காலர் டியூனிலிருந்து நடிகர் அமிதாப் பச்சன் குரலை நீக்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

கொரோனா விழிப்புணர்வு தொடர்பான காலர் டியூனிலிருந்து பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சன் குரலை நீக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த சமூக சேவகர் ராகேஷ் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த டெல்லி நீதிமன்ற அமர்வு, கொரோனா தொடர்பான விழிப்புணர்வு சேவைகளை சில பிரபலங்கள் இலவசமாக வழங்க தயாராக உள்ளதாக கருத்து தெரிவித்தது.

மேலும் இந்த வழக்கில் மனுதாரர் நேரில் ஆஜராகததால் வழக்கு விசாரணையை ஜனவரி 18-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments