பித்தளைக்குள் 31 பவுன் தங்கம் - திருடர்குல திலகங்களை 'சீட்டிங்' செய்த இல்லத்தரசி

0 49252

சென்னையில் வெளியூர் சென்றிருந்த நிலையில் பித்தளை பாத்திரங்களுக்குள் 31 பவுன் நகையை ஒளித்து வைத்திருந்ததால் கொள்ளை போகாமல் தப்பிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சென்னையை அடுத்த ஆவடி பருத்திப்பட்டு பகுதியை சேர்ந்த தேவராஜன் என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மனைவியும் இரு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி தன் மனைவியின் சொந்த ஊரான ஓசூருக்கு தேவராஜன் குடும்பத்துடன் சென்றிருந்தார். வெளியூர் செல்லும் போது, நகைகளை பீரோக்களில் வைக்காமல் அவற்றை எடுத்து பித்தளை பாத்திரங்களில் எடுத்து ஒளித்து வைத்து விட்டு செல்வது சங்கீதாவின் வழக்கமாக இருந்துள்ளது. ஏனென்றால், கொள்ளையர்கள் வீட்டுக்குள் நுழைந்தால் அவர்களின் முதல் குறி பீரோக்கள் மீதுதான் இருக்கும். பீரோக்களை உடைத்து உள்ளே தங்க நகைகளை தேடுவதைதான் கொள்ளையர்கள் முதல் வேலையாக செய்வார்கள்.

தேவராஜன் குடும்பத்தினர் வெளியூருக்கு சென்றுள்ள நிலையில், அவரின் வீட்டுக்குள்ளும் நேற்று முன்தினம் இரவு கொள்ளையர்கள் புகுந்துள்ளனர். வீட்டிலிருந்த 4 பீரோக்களையும் உடைத்து நகைகள் இருக்கிறதா என்று பார்த்துள்ளனர். ஆனால், பீரோக்களில் குண்டுமணி நகை கூட இல்லாததால் ஏமாற்றமடைந்த கொள்ளையர்கள் வெறுங்கையுடன் அங்கிருந்து ஓடி விட்டனர். நேற்று காலை தேவராஜனின் வீடு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அக்கம்பக்கத்தின்ர் போவீசுக்கும் தேவராஜனுக்கும் தகவல் தெரிவித்தனர். உடனடியாக, தேவராஜன் தன் குடும்பத்துடன் வீடு திரும்பினார். ஆனால், அவரின் மனைவி தங்க நகைகளை பித்தளை பாத்திருங்களுக்குள் ஓளித்து வைத்து விட்டு சென்றதால் 31 பவுன் நகையும் கொள்ளையர்களிடத்தில் இருந்து தப்பியது. இது குறித்து சங்கீதா கூறுகையில், கொள்ளையர்களிடத்தில் இருந்து நகைகள் தப்பியது மகிழ்ச்சியாக இருக்கிறது. இருப்பினும், தங்கள் வீட்டுக்கு கொள்ளையடிக்க வந்தவர்களை பிடித்து தக்க தண்டனை அளிக்க வேண்டும்'' என்கிறார்.

கணவர் தேவராஜன் தன் மனைவியை சொக்கத் தங்கம் என்று புகழ்ந்து தள்ளுகிறார்!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments