கொரோனா தடுப்பூசி முதல் தவணை விரைவில் விநியோகம்; அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் தயாராக இருக்க மத்திய அரசு கடிதம்

0 558
கொரோனா தடுப்பூசி முதல் தவணை விரைவில் விநியோகம்; அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் தயாராக இருக்க மத்திய அரசு கடிதம்

கொரோனா தடுப்பூசி முதல் தவணை விரைவில் விநியோகிக்கப்பட உள்ளது என்றும், அதைப் பெறுவதற்கு தயாராக இருக்குமாறும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல ஆலோசகர் மருத்துவர் பிரதீப் ஹால்டெர் எழுதியுள்ள கடிதத்தில், தடுப்பூசிகளை, பதிவு செய்த பயனாளிகளின் விவரங்களின் அடிப்படையில் மாவட்டங்களுக்கு எவ்வாறு விநியோகிப்பது என்பது குறித்த விவரங்கள் மாநிலங்களுக்கு விரைவில் தனியாக அனுப்பப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments