இரண்டு நாட்களில் கொரோனா தடுப்பு மருந்துக்கான போக்குவரத்து...

இரண்டு நாட்களில் கொரோனா தடுப்பு மருந்துக்கான போக்குவரத்து... மருந்தை முதல்கட்டமாக பெறுவோரின் பட்டியல் தயாரிப்பு
கொரோனா தடுப்பூசியை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையை மத்திய அரசு இரண்டு நாட்களில் தொடங்க உள்ளது.
தடுப்பூசிக்குரியவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. நாட்டின் 41 முக்கிய நகரங்களுக்கு இந்த தடுப்பூசிகள் கொண்டு செல்லப்பட உள்ளன.
இவற்றை நாட்டின் மூலை முடுக்கிற்கு ஹெலிகாப்டர்கள் மூலமாகக் கொண்டு செல்வதற்கு விமானப்படையின் உதவி கோரப்பட்டுள்ளது.
புனே விமான நிலையத்தில் இருந்து புறப்படும் பயணிகள் விமானத்திலும் கொரோனா தடுப்பு மருந்தைக் கொண்டு செல்ல மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
மருந்தை விநியோகிக்க வட மாநிலங்களுக்கு டெல்லியும் கிழக்குப் பகுதிகளுக்கு கொல்கததாவும் தென் இந்தியாவுக்கு சென்னையும் ஹைதராபாதும் முக்கிய மையங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.
Comments