கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மாநில அரசுக்கு உதவும் வகையில் கேரளாவுக்கு மத்தியக் குழுவினர் இன்று வருகை

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மாநில அரசுக்கு உதவும் வகையில் கேரளாவுக்கு மத்தியக் குழுவினர் இன்று வருகை
கொரோனாவைக் கட்டுப்படுத்த மாநில அரசுக்கு உதவும் வகையில் தேசிய நோய் தடுப்பு மைய இயக்குநர் எஸ்.கே. சிங் தலைமையிலான மத்தியக் குழு இன்று கேரளா செல்கிறது.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனாவை கட்டுப்படுத்த உதவும் மத்தியக் குழு இன்று கேரளா சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கொரோனாவை எதிர்கொள்வதில் மாநில பொது சுகாதாரத்துறையின் நடவடிக்கைகளை ஆய்வு செய்து, அது சார்ந்த நடவடிக்கைகளில் மாநில சுகாதாரத்துறைக்கு இந்தக் குழு உதவ உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
Comments