மு.க.ஸ்டாலினுக்கு மீண்டும் சவால்... நேருக்கு, நேர் விவாதிக்க தயாரா?..

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்த சவாலை ஏற்றுக் கொள்வதாகவும், ஸ்டாலின் நேருக்கு நேர் விவாதிக்குமாறும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் 2-வது நாளாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பன்னீர் செல்வம் பூங்கா சந்திப்பில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
ஈரோட்டில் வீடற்ற ஏழை எளிய மக்களுக்கு 1800 வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர், 455 கோடி ரூபாயில் ஊராட்சி கோட்டை குடிநீர் திட்டம் செயல் படுத்தபட உள்ளதாக கூறினார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிந்தித்து பேசும் திறன் இல்லாதவர் என்று சாடிய பழனிசாமி, பொய் பேசுவதற்காக ஸ்டாலினுக்கு நோபல் பரிசே வழங்கலாம் என்றார்.
ஊத்துக்குளியில் பரப்புரை மேற்கொண்ட முதலமைச்சர், அத்திக்கடவு அவினாசி திட்டம் இன்னும் ஓராண்டு காலத்தில் நிறைவேறும் என்று உறுதி அளித்தார்.
அதிமுக ஆட்சியில் இ டெண்டர் விடப்படுவதாகவும், திமுக ஆட்சியில் பெட்டியில் டெண்டர் விடப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார். ஊழல் குறித்து விவாதிக்க தன்னுடன் நேருக்கு நேர் வந்து பேசுமாறு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சவால் விடுத்த பழனிசாமி, நாட்டு மக்கள் தீர்ப்பு கொடுக்கட்டும்” என்று தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து சென்னிமலை, அரச்சலூர் உள்ளிட்ட இடங்களிலும் அதிமுகவுக்கு முதலமைச்சர் ஆதரவு திரட்டினார். ஏழை, எளிய மாணவர்களுக்கு எட்டாக்கனியாக இருந்த மருத்துவக் கல்வியை அதிமுக அரசு நிஜமாக்கி இருக்கிறது என்றும் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்தார்.
Comments