காதல் முன்விரோதம் : காதலியின் அத்தை மகனால் முப்பது வெட்டி பஜனை கோயில் தெருவை சேர்ந்த சூர்யாவுக்கு கத்திக்குத்து

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே காதலால் ஏற்பட்ட முன்விரோதத்தில் இளைஞரை கத்தியால் குத்தி கொலை செய்த, காதலியின் அத்தை மகனை போலீசார் தேடி வருகின்றனர்.
முப்பது வெட்டி பஜனை கோயில் தெருவை சேர்ந்த சூர்யா என்பவரும் அதே பகுதியை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவியும் காதலித்து வந்துள்ளனர். இது கடந்த வாரம் பெண் வீட்டாருக்கு தெரிந்த நிலையில், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்ணின் உறவினர்கள், சூர்யாவின் குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
தகராறின் போது அந்த பெண்ணின் அத்தை மகனான அஜய்யை, சூர்யா தாக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை அங்குள்ள ஏரிக்கரை அருகே இயற்கை உபாதை கழிக்க சென்ற சூர்யாவை வழிமறித்த அஜய், கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது.
Comments