இந்தியா - ஆஸி போட்டி : முதல் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலியா

0 1944

ந்தியாவிற்கு எதிரான முன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி முதல் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்துள்ளது.

சிட்னியில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னரும், புகோவ்ஸ்கியும் களமிறங்கினர்.

5 ரன்கள் எடுத்திருந்த வார்னர் சிராஜ் வீசிய பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். புதுமுக ஆட்டகாரரான புகோவ்ஸ்கி 62 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சைனி பந்து வீச்சில் அவுட்டாகினார்.

இதனையடுத்து ஸ்டீவன் ஸ்மித்தும், லபுசேனுன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் அந்த அணி முதல் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments