சர்ச்சையில் நடிகை ' இயற்கை' குட்டி ராதிகா ... மோசடி சாமியாரிடம் ரூ.1½ கோடி பெற்றாரா?

0 7115

சினிமா படத்தில் நடிப்பதற்காகவே மோசடி சாமியாரிடத்திலிருந்து ரூ. 75 லட்சம் சம்பளம் பெற்றதாக நடிகை குட்டி ராதிகா விளக்கமளித்துள்ளார்.

பெங்களூருவை சேர்ந்த யுவராஜ் சாமி என்பவர் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜனதா தலைவர்களின் பெயரில் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்துள்ளனர். யுவராஜ் சாமி அளித்த வாக்குமூலத்தில், நடிகை குட்டி ராதிகாவுக்கு ரூ.1½ கோடி கொடுத்துள்ளதாக கூறினார். இதையடுத்து, நடிகையும் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியின் இண்டாவது மனைவியுமான குட்டி ராதிகா பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார்.

அப்போது, தான் சினிமா படத்தில் நடிக்கவே யுவராஜ் சாமியிடத்தில் இருந்து பணம் பெற்றதாக கூறிளார். மேலும், குட்டி ராதிகா கூறுகையில், யுவராஜ் சாமி எங்கள் குடும்ப ஜோதிடர். எங்கள் தந்தையின் நண்பரும் கூட. எங்கள் குடும்பத்துடன் 17 ஆண்டுகளாக நட்பில் இருந்து வருகிறார். எனது எதிர்காலம் குறித்து அவர் கூறிய ஜோசியம் பலித்ததால் எங்கள் குடும்பத்தில் அவருக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஒரு வரலாற்று படத்தை தயாரிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு உண்டு. யுவராஜ் சாமி என்னிடத்தில் புதிய படம் ஒன்றை எடுக்க விரும்புவதாக தெரிவித்தார். தொடர்ந்து "நாட்டிய ராணி சாந்தலா" என்ற பெயரில் படம் எடுக்க நாங்கள் பேசி முடிவு செய்தோம். தனது மகள் பெயர் மற்றும் என்னுடைய சினிமா நிறுவனத்தின் பெயரில் புதிய படத்தை எடுக்க யுவராஜ்சாமி ஐடியா கூறினார்.

நானோ... ஒரே நிறுவனத்தின் சார்பில் படத்தை தயாரிக்க வேண்டும் என்று சொன்னேன். தொடர்ந்து, அவரின் மகளின் பெயர் கொண்ட நிறுவனத்தின் கீழ் படத்தை தயாரிப்பது என்று முடிவு செய்தோம். இந்தபடத்தில் நடிப்பதற்காக எனக்கு முதல்கட்டமாக ரூ.15 லட்சம் எனது வங்கி கணக்கிற்கு அனுப்பினார். பின்னர், தனது உறவினர் மூலம் ரூ.60 லட்சம் அனுப்பினார். ரூ.1½ கோடி எனது வங்கி கணக்கிற்கு அவர் அனுப்பியதாக கூறிய தகவல் முற்றிலும் தவறானது.

கொரோனா காரணமாக தற்போது நான் பெங்களூருவில் இல்லை. மங்களூருவில் தங்கி இருந்தேன். அதனால் ஒப்பந்தம் செய்துகொள்ள முடியவில்லை. அவர் மிக நல்லவர் என்று நாங்கள் நினைத்திருந்தோம். ஆனால், யுவராஜ் சாமி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டதை கேள்விப்பட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். இதுவரை, நாங்கள் யாரையும் ஏமாற்றவில்லை. நாங்கள் தான் ஏமாற்றப்பட்டு இருக்கிறோம். என் மீது வந்த புகாருக்கு விளக்கம் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நான் இந்த பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

நடிகை குட்டி ராதிகா, இயற்கை , வர்ணஜாலம், மீசை மாதவன் உள்ளிட்ட சில தமிழ்ப்படங்களில் நடித்துள்ளார். தற்போது, கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியை விட்டு பிரிந்து வாழ்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments