கொலை வழக்குகள் தொடர்பான விசாரணை 15 ஆண்டுகள் வரை நடந்தால் யார் சாட்சி சொல்ல வருவார்கள்? - சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

கொலை வழக்குகள் தொடர்பான விசாரணை 15 ஆண்டுகள் வரை நடந்தால் யார் சாட்சி சொல்ல வருவார்கள், எப்படி தண்டனை பெற்றுக் கொடுப்பீர்கள் என சென்னை உயர் நீதிமன்றம் போலீசுக்கு கேள்வி எழுப்பி உள்ளது.
கொலைக்குற்றத்திற்காக விசாரணைக் கைதியாக 5 ஆண்டுகள் சிறையில் உள்ள ஒருவரின் ஜாமின் மனுவை நீதிபதி பாரதி தாசன் விசாரித்தார். அப்போது, மாநில குற்றவியல் தலைமை வழக்கறிஞரிடம் இந்த கேள்வியை அவர் எழுப்பினார்.
தொடர்ந்து, சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள கொலை வழக்குகள் எத்தனை என வரும் 25 ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்கும்படி, சென்னை மாநகர காவல் ஆணையருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
அறிக்கையை பார்த்தபின் ஆணையரை அழைத்து விளக்கம் கேட்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.
Comments